பிப்ரவரி மாதம் காதலின் மாதம் அதாவது “ Month of love” என்றால் ,மார்ச் மாதம் மங்கையர் மாதம்.இந்த மங்கையர் மாதத்தை கொண்டாடும் விதமாக இனி வாரம் தோறும் வாசகர்களுக்காக இந்தத் தொடர்.
பெண், பிரபஞ்சத்தின் அவிழ்க்க முடியா ஆச்சர்யப்புதிர். பரந்திருக்கும் வானம் ஆணென்றால் பார்க்குமிடமெங்கும் நிறைந்திருக்கும் பூமிதான் பெண்.உலக நாகரிகங்களின் பெரும் மாற்றங்கள் பெரும்பாலும் பெண்களாலும், பெண்களுக்காகவும் நிகழ்ந்தவையே. காலம் வேறு.களம் வேறு என்றாலும் காரணம் ஒன்றுதான், பெண். பெண்மை ஈர்ப்ப்ப்புள்ள உயிர். உலகம் இயங்க ஒரே ஒரு காரணம்.
வாழிடத்து பசுமைக்கு மரமும் வாழ்வின் பசுமைக்கு பெண்னும் என்பது பெரியோர்கள் வாக்கு.பெண்களும் மரங்களும் பிரிக்கமுடியாதவை என்பதை இன்னும் ஆழமாக எடுத்துக்காடும் தொடர் இந்த மாதம்
இயற்கையை எல்லோரும் விரும்புவதற்கான காரணம், இயற்கை ஒரு பெண்ணாகவே காட்சியளிக்கிறது. சரி மனிதர்கள் கிறங்கினால் ஒரு அர்த்தமுண்டு. மரங்கள் கிறங்கினால் ??ஆம், இங்கு சில மரங்கள் அப்படித்தான் இருக்கின்றன.
அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடியதாகக் குறிப்புகள் உண்டு. புன்னை மரத்தை தங்கையாகக் கொண்டே வாழ்ந்ததற்கான குறிப்புகளும் உண்டு.
மேலும் பெண்கள் உதைத்தால் அசோக மரம் பூக்கும் , பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் பெண்கள் பேசினால் நமேரு மரம் பூக்கும் , பெண்கள் பார்த்தால் திலக மரம் பூக்கும் என மங்கையருக்கும் மரங்களுக்குமான தொடர்புகள் ஆயிரமாயிரம்.
உங்களுக்குத் தெரியுமா? பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள் உண்மையில் அது பெண் என்றால் பேயும் கிறங்கும் என்பதன் மருவல் என்பது.
வியப்பென்ன தெரியுமா ? பெண்கள் நட்பாடினால் இந்த மரம் பூ பூக்கும்.
உடனே ஏதோ டைனோசர் காலத்தில் இருந்த மரம் போல என்று நினைக்கவேண்டாம். இப்போதும் இருக்கிறது. கிராமங்களிலும், மலைத்தொடர்களிலும் கிடைக்கும் இந்த மரம் ஏராளி என்று இன்றளவும் வழங்கப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் அல்சிடோனியா ஸ்காலரிஸ். இலக்கியங்களில் இதன் பெயர் ஏழிலைப் பாலை. பெரும் மருத்துவ குணமுள்ள இந்த மரத்துக்கு இப்படி ஒரு குணமும் உண்டு என்பதுதான் இங்கு ஆச்சரியமே.
ஒரு இலைக்காம்பில் 5 முதல் ஏழு இலைகள் இருக்குமென்பதால் இப்படி பெயர் வந்திருக்கலாம். பச்சையும் வெள்ளையும் கலந்த இதன் பூக்கள் காண்பதற்கு வசீகரமானவை. ஆனால் என்ன பூக்க வைக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.
இலக்கிய ஆதாரங்கள் என்று கேட்டால் கம்பராமாயணம், சமஸ்கிருத புராண பாடல் முதல் அண்மையில் வெளிவந்த வேள்பாரி வரையில் இதற்கான சான்றுகள் விரவிக்கிடக்கின்றன.
முருகனுக்கு வள்ளி மீது காதல். ஆனால் எப்படி அவளுக்குச் சொல்வதென்று தெரியவில்லை. நண்பன் எவ்வி தந்த எல்லா யோசனைகளும் தோற்றுப்போகவே, முருகன் வள்ளியை ஈர்க்க பயன்படுத்திய வெற்றி உத்தி இந்த ஏழிலைப்பாலை தான். அப்படி என்ன செய்தான். அடுத்த கட்டுரையில் காண்போம்
அடுத்த கட்டுரை