சோமாலியாவில் தொடர்ந்து 6-வது முறையாக பெய்யவேண்டிய பருவமழை பெய்யாததால் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை அங்கு கடுமையான வறட்சி நிலவ உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
கடந்த 2011-ல் சோமாலியாவில் ஏற்பட்ட வறட்சியால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், இந்த முறை 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிக வறட்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு சோமாலியா மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளதாக ஐநா மனிதாபிமான உதவிகள் துறை தலைவர் மார்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.