பிரம்மபுத்திரா நதிக்கரையை இணக்கும் பாலத்தை மோடி திறந்து வைக்கிறார்

இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான இரண்டடுக்கு பாலத்தை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார். அஸ்ஸாம், அருணாசல பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான இரண்டடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்துக்கான கட்டுமான பணிகளை 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் தொடங்கி வைத்தார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த ரயில் மற்றும் சாலை பாலம் தற்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

4 புள்ளி 94 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது இந்தியாவின் மிக நீண்ட பாலங்களில் ஒன்றாகும். இதனை பிரதமர் மோடி வரும் 25ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

Exit mobile version