தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் – காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத்

தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஃபேல் போர் விமான கொள்முதல் குறித்து பதிலளிக்க மோடி மறுத்து வருவதாக கூறினார். இந்தநிலையில் தமிழகத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம்சாட்டிய சஞ்சய் தத், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கூட சந்திக்க பிரதமர், தமிழகம் வரவில்லை என்றார்.

Exit mobile version