சட்டீஸ்கர் மாநில மக்கள் அதிகளவில் வாக்களித்து மாவோயிஸ்ட்டுகளை முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பிலாஸ்பூரில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
சட்டீஸ்கர் மக்கள் தங்களுக்கு சேவை செய்ய பாரதிய ஜனதா கட்சியை தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். தேர்தலில் மக்கள் அதிகளவில் வாக்களித்து, மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் சாதியை அடிப்படையாக கொண்டு எதிர்கட்சிகள் ஓட்டு வேட்டை நடத்தி வருவதாக மோடி கண்டனம் தெரிவித்தார்.
Discussion about this post