கோவையில் 2 நாட்கள் நடைபெற்ற மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி

கோவையில் நடைபெற்ற மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த 107 கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைப்பாளையத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வானூர்தி பொறியியல் துறை மற்றும் பெங்களூரை சேர்ந்த ராக்கெட் ஆராய்ச்சி மையம் சார்பில் 2 நாட்கள் மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, மதுரை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், சேலம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 107க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

21 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த செய்முறை பயிற்சியில், மாணவர்கள் உருவாக்கிய ராக்கெட் மாதிரிகளை விண்ணில் செலுத்தினர். இறுதியில் சிறப்பான மாதிரி ராக்கெட்டுகளை உருவாக்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Exit mobile version