சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டதையொட்டி, ஏராளமான பக்தர்கள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெண் பக்தர்களும் சபரிமலை செல்லத் தொடங்கினர்.
அதே நேரம் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பழங்குடியின பெண்கள் சாலைகளில் திரண்டு, சபரிமலை செல்லும் வாகனத்தில் பெண்கள் இருக்கின்றனரா என சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்படி பெண்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் சபரிமலை செல்ல வேண்டாம் என காலில் விழுந்து கெஞ்சி வருகின்றனர்.
அதே நேரம் சில இடங்களில் பெண் பக்தர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.
இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில தொலைக்காட்சியான ரிபப்ளிக் பெண் செய்தியாளர் பூஜா பிரன்னாவின் கார் மீது 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் கேரளாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.