திமுகவின் பொய் குற்றச்சாட்டை கண்டித்து சிறுபான்மை அமைப்புகள் ஆர்பாட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கண்டிக்கும் வகையில் சென்னையில் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் அருகே சிறுபான்மை அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பொய்யான கொலை குற்றச்சாட்டை முன்வைக்கும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் நிர்வாகிகள், தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வோம் எனவும் கூறினர்.

Exit mobile version