மினிவேன் ஓட்டுனருக்கு சுங்கச்சவடி ஊழியருக்குமிடையே அடிதடி

பாடியநல்லூர் சுங்க சாவடியில் மினி வேன் ஓட்டுநரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் சுங்கச் சாவடியில் மினிவேன் ஓட்டுனருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இஅடையே சுங்க கட்டணம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வடமாநிலத்தை சேர்ந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஓட்டுனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது உதவியாளர் ஜேம்ஸ்ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மினிவேன் ஓட்டுனருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில ஊழியர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை சூறையாடினர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த திருவள்ளூர் போலீசார் தகராறு குறித்து வழ்ககுப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version