திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 82 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு திருச்சி மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உத்தேச மதிப்பாக 15 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2014ஆம் ஆண்டு உள்ளூர் திட்ட குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது. 2015 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக அனுமதி பெற்று வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆய்வு செய்தார். ஆய்வின் போது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன், அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.