சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணிக்கான ஆணைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சென்னை மாநகராட்சியில் தினசரி 5 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிப்பது போக மீதமுள்ள குப்பைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில் மொத்தமுள்ள 16 மண்டலங்களில், 7 மண்டலங்களுக்கான துப்பரவு பணிகளை மேற்கொள்ளும் ஆணையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த உர்பேசர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமிட் பெசிலிட்டீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கான ஆணை வழங்கப்பட்டது.
மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சென்னையில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை கணினி முறையில் கண்காணிக்கும் மையத்தையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.