விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் கே.சி.வீரமணி

சென்னை அடுத்த நெமிலியில் முதலமைச்சர் குறை தீர்ப்பு கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து, அமைச்சர் கே.சி.வீரமணி வேலூர் செல்லும் போது, வழியில் இரு சக்கர வாகன விபத்தில் காயத்துடன் இருந்தவரை உடனடியாக மீட்ட அமைச்சர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்ததால் விபத்தில் சிக்கிய நபர் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் பிழைத்தார்.

Exit mobile version