பொறியியல் படிப்பில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50ல் இருந்து 45 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிசி, எம்.பி.சி, பிசி முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 45ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் 35 ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.