வென்ற மும்பை.. பயம் காட்டிய ரஷித்கான்! உள்ளுக்குள் உறங்கிய மிருகத்தை எழுப்பிய மும்பை பவுலர்ஸ்!

57வது லீக் ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற 57வது லீக் போட்டியில், மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களும், இஷான் கிஷன் 31 ரன்களும், விஷ்ணு வினோத் 30 ரன்களும் குவித்தனர். குஜராத் அணியில் ரஷித்கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் பெரிதாக யாரும் சோபிக்கவில்லை. மில்லர் மட்டும் 41 ரன்கள் அடித்திருந்தார். எட்டு விக்கெட்டுகள் பறிக்கொடுத்தப் பிறகு முடிந்தது ஆட்டம் என்று எண்ணுகையில்தான் ரஷித் கானின் ருத்ர தாண்டவம் ஆரம்பமானது. அடிக்கும் ஒவ்வொரு அடியும் சிக்சரும் ஃபோருமாக விளாசித் தள்ளினார். என்னதான் சூர்ய குமார் யாதவ் முதல் பேட்டிங்கில் சதம் விளாசியிருந்தாலும், நேற்றைய நாயகன் ரஷித் கான் தான். நான்கு விக்கெட்டுகளும் 79 ரன்களும் குவித்து எதிரணிக்கு ஒரு பயத்தைக் காட்டிவிட்டார்.

 

Exit mobile version