பாஸ்வர்டுகள் மூலம் இணையவழி செயலிகளை உபயோகிக்கும் முறை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைரேகை, ஃபேஸ் டிடெக்ஷன் உள்ளிட்டவைகளுக்கு பதிலாக செல்ஃபி(சுய புகைப்படம்) மூலமாக எளிதாக செயலிகளுள் நுழையும் வசதி அறிமுகமாக உள்ளதால் பாதுகாப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக் ஐடி (BLOCK ID) மூலமாக தடையின்றி செயலிகள் மற்றும் இணையதளங்களை உபயோகிப்பதால் ஹேக்கர்கள் ஹேக் செய்ய முடியாத நிலை உருவாகும் என தெரிய வந்துள்ளது. மெட்டாவர்ஸ் நிறுவனம் முதல்முறையாக இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.