சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை

நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த, கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில், மூன்றாவது இடத்திற்கான அணிக்கான போட்டியில் அர்ஜெண்டினா, சிலியை வென்றது. போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த அர்ஜென்டினா அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், 50 ஆயிரம் டாலர்கள் அபராதமும் விதித்து தென் அமெரிக்க கால்பந்து உத்தரவிட்டுள்ளது. அதேசமயத்தில், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version