சிவன் இல்லையேல் சக்தி இல்லை!!! சக்தி இல்லையேல் சிவன் இல்லை – இன்று உலக ஆண்கள் தினம் !!!

அன்பு, கனிவு, காதல் என்ற மென்மை பண்பிலும் சரி, கடின உழைப்பு, கடும் துயரிலும் கலங்காத மனம், போராட்ட குணம் என அனைத்துக்கும் ஆதர்ஷனமாக திகழும் ஆண்கள் தினம் இந்த நவம்பர் 19.. பார்போற்றும் அந்த ஆண் சமூகம் குறித்து சில வரிகள்…

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய இடங்களில் 1999ல் ஆண்கள் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது. தந்தையாக, கணவனாக, சகோதரனாக, தோழனாக என பெண்களை முன்னுக்கு தள்ளி சாதிக்க தூண்டும் சமூக காவலனாக ஆண்கள் உள்ளனர் என்பது மிகையல்ல.

ஒரு ஆண் வளர்க்கப்படும் போதே பொறுப்புகளை தூக்கி சுமக்கும் பயிற்சிகளை பெறுவது இயற்கையாகவே அமைந்துவிடுகிறது. கடினத்திற்கு எடுத்துக்காட்டாய் ஆண்களும், மென்மையான விளம்பரங்களில் பெண்மையும் வருவதை நாம் அறிந்ததே. ஐ. நா.- வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடும் இவ்வேளையில் ஆண் மகனை வளர்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் சமூகத்தின் வலிமை மிக்க ஒரு சக்தி நம்மால் வளர்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு வாழ்விற்கு அடிப்படை சொந்தக்காரர்களாகிய ஆண்களுக்கு நியூஸ் ஜெ-வின் ஆண்கள் தின வாழ்த்துக்கள்.

 

Exit mobile version