ஆடுகளம் உயிரோட்டமாக இருப்பதால் முடிவு கிடைக்கும் – கோலி

மெல்போர்ன் ‘ஆடுகளம்’ உயிரோட்டமாக உள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் புதன்கிழமை தொடங்குகிறது. மெல்போர்ன் ஆடுகளம் சில வருடங்களாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. அத்துடன் போட்டிகளில் முடிவு கிடைக்காமல் ‘டிரா’விலேயே முடிந்துள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு மெல்போர்னில் விளையாடியபோது, இந்தியா போட்டியை டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் மெல்போர்ன் டெஸ்ட் மட்டும் டிராவில் முடிந்தது.

இதனால் புதன்கிழமை தொடங்கும் போட்டியிலும் முடிவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆடுகளத்தை பரிசோதித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தற்போதைய ஆடுகளம் உயிரோட்டமாக இருப்பதால், முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளில் ஆடுகளம் என்ன செய்ததோ, அதை இந்த ஆடுகளமும் செய்யும் என்றும் கோலி நம்பிக்கை வெளியிட்டார்.

Exit mobile version