மல்லிகைப்பூ செடிக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு

வெளிநாடுகளில் உள்ளதைப் போல, விவசாயத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறை, தற்போது தமிழகத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது. மல்லிக்கு நோய் தாக்குதல் அதிகம் ஏற்படும் என்பதால், அடிக்கடி பூச்சி மருந்து தெளிக்க வேண்டும்.

இந்நிலையில், மல்லிகைப்பூ செடிக்கு ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரத்திற்கு சத்தியமங்கலம் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ட்ரோன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை மருந்து தெளிப்பதோடு, பூச்சிக்கொல்லி மருந்து தேவை பாதியாக குறைவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version