தமிழக கேரள எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் அபாய முறையில் வீசப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் மர்ம மூட்டைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுகளை மர்ம நபர்கள் தமிழக எல்லை பகுதிகளில் கொட்டி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லையில் அபாய முறையில் வீசப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: மருத்துவ கழிவுகள்
Related Content
மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை: சென்னை ஆட்சியர்
By
Web Team
December 24, 2019