கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததையடுத்து, அரசு வணிக முத்திரையுடன் உலக அளவில் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்பக்கழக மாநில மன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்
கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததை தொடர்ந்து வானிலை ஆய்வகத்தில் பூண்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு தொழில்நுட்பக்கழக மாநில மன்ற உறுப்பினர், சீனிவாசன் இரண்டு வார காலத்திற்குள் அனைத்து பூண்டு விவசாயிகளிடமும் கலந்துரையாடி கொடைக்கானல் மலைப்பூண்டு என்ற அரசின் வணிக முத்திரையுடன், சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் நாடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதில் வானிலை ஆய்வக தலைவர் எபினேசர், அன்னை தெரெசா பல்கலைக்கழக உயிர் வேதியல் துறை பேராசிரியர் உஷா மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.