டெங்கு கொசுக்களை அழிக்கவே முடியாது – பூச்சியியல் விஞ்ஞானி மாரியப்பன் கருத்து

டெங்கு கொசுக்களை அழிக்கவே முடியாது என்று பூச்சியியல் விஞ்ஞானி மாரியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை கருப்பாயூரணி அருகே மஸ்தான்பட்டி கபீர் நகரில், பல்வேறு அமைப்புகளின் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் மதுரை மத்திய பூச்சியியல் ஆய்வு மைய விஞ்ஞானி மாரியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு பரவலுக்கு மிக முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்பட்டதுதான் என்று குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை இனி ஒருபோதும் அழிக்கவே முடியாது என்று தெரிவித்த அவர், மனிதர்களாகிய நாம் இனி அவற்றோடு இணைந்து எச்சரிக்கையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். சுத்தமின்மைதான் பன்றி காய்ச்சல் உருவாக வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு தேவையான மருந்துகள் நம்மிடையே உள்ளதாகவும் அவர் கூறினார். பின்னர், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.

 

Exit mobile version