கடந்த ஆண்டைவிட சாமந்திப் பூ விளைச்சல் குறைவு

மஞ்சள் சாமந்திப் பூவின் விளைச்சல் குறைந்த போதிலும் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மஞ்சள் சாமந்திப் பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து பெறப்படும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையால் குறைந்த அளவே பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். அதேவேளையில், மஞ்சள் சாமந்தி கிலோ ஒன்றுக்கு 100 முதல் 130 ரூபாய் வரை விலை கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version