நன்னிலம் அருகே மகா மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவது குறித்த இரண்டாம் கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 13 ஆம் தேதி சித்திரை திருவிழா நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக திருவிழா ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 9 ஆம் தேதி நடந்த சமாதான பேச்சுவார்த்தையின் போது, இந்து அறநிலையத்துறையினர் போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டதை அடுத்து, பேச்சுவார்த்தையை தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், நன்னிலம் வட்டாட்சியர் ஜானகி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருதரப்பினர் கலந்து கொள்ளாததால் மீண்டும் பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.