கர்நாடகாவில் பட்டபகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

கர்நாடக மாநிலத்தில் பட்டபகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூரு அருகே தேரலகட்டே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், சக்திநகர் பகுதியை சேர்ந்த சுஷாந்த் என்ற 22 வயது இளைஞரும், கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் சுஷாந்த்தின் பழக்கங்கள் மாறுவதை அறிந்த மாணவி, சுஷாந்த்தை விட்டு விலகியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சுஷாந்த், கடந்த 10 நாட்களாக மாணவி சென்ற இடம் எல்லாம் பின் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் வெளியில் சென்ற மாணவியை வழிமறித்த சுஷாந்த், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சராமாரியாக குத்தினார். இதில், நிலைகுலைந்து மாணவி கீழே விழ, சுஷாந்தும், தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்த அப்பகுதி மக்கள், இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version