கோவையில் தனியார் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

கோவையில், தனியார் வங்கியில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களை தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சுங்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இடைத்தரகர் ஒருவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி வெற்றி வேலனிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களும் கடன் பெற்று தருவதாக கூறி வெற்றி வேலனிடம் நம்பிக்கை தெரிவித்ததாக தெரிகிறது. நீண்ட நாட்களாகியும் கடன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த வெற்றி வேல் துப்பாக்கியுடன் வங்கிக்குள் அதிரடியாக நுழைந்து, மேலாளர் மற்றும் ஊழியர், இடைத்தரகர் ஆகியோரை சரமாரியாக தாக்கினார். அவரது கையில் துப்பாக்கியும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ac

சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில், வெற்றிவேலை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version