மீடு புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த மலையாள நடிகை, தற்போது இயக்குனராக மாற முடிவு செய்துள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான பார்வதி, தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்த பார்வதி, அவருக்கு ஆதரவு தெரிவித்து, மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை வன்மையாக கண்டித்திருந்தார். இதன்பிறகு, மீடு தொடர்பான புகார் கூறும் பெண்களுக்கு ஆதரவாக மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பில், பார்வதி அங்கம் வகித்ததால், மலையாள நடிகர்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தை செய்வதை தவிர்த்தனர்.
இந்நிலையில், ஒரு வருடமாக படத்திற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது குறித்து நடிகை பார்வதி கூறுகையில், நடிகைகளின் பாதுகாப்பிற்காகவே, மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். இந்தியில், மீடூ தொடர்பாக புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக, மீடூ புகார் குறித்து ஆதரவு தெரிவிப்பவர்கள், இங்கு ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.
பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை பார்வதி, இரண்டு கதைகளை தற்போது, உருவாக்கி உள்ளார். அதில், ஒன்று தான் அரசியல் கதை என்றும் மற்றொன்று ‘சைக்கலாஜிக்கல் திரில்லர்’ கதை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சில மாதங்களில் கதாபாத்திரத்திற்கான பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து, முதல் கட்ட படப்பிடிப்பு காட்சிகளை துவங்குவார் என்று தெரிகிறது.