டயரிலிருந்து மின்சாரம் உற்பத்தியா ?

எலக்ட்ரிக் வாகனங்களில் நாம் பயணிக்கும் போது எதிர்கொள்ளும் பெரிய சவால் என்னவென்றால் பயணிக்கும் தூரம் வரை பாட்டரியில் சார்ஜ் இருக்க வேண்டும் என்பது தான்.அதற்கு மாற்றுவழியாக தற்போது சுமிட்டோமோ என்ற நிறுவனம் ஒரு புதிய வழியை கண்டுப்பிடித்துள்ளது.வாகனத்தில் பொருத்தியுள்ள டயரிலிருந்து தானாகவே மின் உற்பத்தியாகும் வகையில் இதன் அமைப்பு உள்ளது.இதில் ‘energy harvester’ பொருத்தப்பட்டுள்ளது.இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு postivie electrode மற்றும் negative electrode பொருத்தப்பட்டுள்ளது.இவை இரண்டும் சந்திக்கும் போது ஒரு எனர்ஜி உண்டாகும், அதன் மூலம் எலக்ட்ரிக் வாகனங்களில் நாம் பயணிக்கும் தூரத்திற்கு தேவையான சார்ஜினை கொடுக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த டயரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது வருங்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தற்போது ஜப்பானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version