10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம்

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் பணியாளருக்கான இணை இயக்குநர் அமுதவல்லி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 10-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், தலைப்பு எழுத்து, மீடியம், பயிற்று மொழி, புகைப்படம், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை நாளைக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

10-ம் வகுப்பு மாணவர்களின் சுய விவர பெயர் பட்டியலை சரிபார்த்து அனைத்து பள்ளிகளும் தங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் நாளை முற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின், சான்றிதழில் திருத்தம் கோரினால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version