அமெரிக்க நாடாளுமன்ற அவையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா

அமெரிக்க நாடாளுமன்ற அவையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்திய – அமெரிக்க அமைப்புகள் சார்பில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்திய வம்சாவளி எம்.பிக்கள், இந்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மகாத்மா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் காந்திக்கு பிடித்த பாடலான வைஷ்ணவ ஜனதோ பாடல் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சிங், மகாத்மா காந்தி தனது வாழ்க்கையே தான் சொல்ல வரும் பாடம் என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.

Exit mobile version