எப்,ஐ,டி.இ செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு நடைபெறத் துவங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையே கடந்த இரண்டு நாட்களாக கடுமையானப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு நாட்களிலும் போட்டியானது டிராவில் முடிந்தது. எனவே வெற்றியாளரை தேர்வு செய்வதற்கு ரேபிட் சுற்று முறையில் டை பிரேக்கர் நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் கார்ல்சென் வென்றார். அதனைத் தொடர்ந்து அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் முனைப்புடன் போராடிய பிரக்ஞானந்தாவிற்கு இரண்டாவது சுற்றிலும் பின்னடைவே ஏற்பட்டது. இரண்டாவது சுற்றையும் வென்று செஸ் உலகக்கோப்பையைக் கைப்பற்றினார் நார்வேயின் கார்ல்சன்.
செஸ் உலக்கோப்பையில் இரண்டாம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!
-
By Web team

- Categories: இந்தியா, உலகம், விளையாட்டு
- Tags: chess world cupmagnus carlsenpraggnanandhaasecond place
Related Content
செஸ் உலகக்கோப்பை! வெற்றிக்கனியைப் பறிப்பாரா பிரக்ஞானந்தா!
By
Web team
August 24, 2023