துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மதுரை மாணவர்

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியான பாலசுப்பிரமணியன் – தமிழ்ச்செல்வி தம்பதி மகன் ஸ்ரீமன், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். துப்பாக்கி சூடும் வீரரான ஸ்ரீமன் டெல்லியில் கடந்த 28 ஆம் தேதி கேந்திரிய வித்யாலாய பள்ளிக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அடுத்த மாதம் ஹரியானாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு ஸ்ரீமன் தேர்வாகியுள்ளார்.

Exit mobile version