தேர்தலன்று பெரிய வியாழன் வருவதால் வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும்

ஏப்ரல் 18-ம் தேதி பெரிய வியாழன் வருவதால், வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுரை மாவட்ட பேராயர் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் புனித நாள் வருகிறது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்மறை மாவட்ட பேராயரும், தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவருமான அந்தோணி பப்புசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பெரிய வியாழன் புனித நாளன்று தேர்தலை வைத்து கொள்ள உகந்தது கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள இயலாத சூழல் இருப்பதால், வழிபாட்டுக்கு உகந்தவாறு வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version