விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் சமீபத்தில் வேகமாக வந்த கார் ஒன்று, சாலை தடுப்புகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளி விட்டுச் சென்றது. இதுகுறித்தான வழக்கை ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அப்போது அஜாக்கிரதையாக வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், இவ்வாறு செய்யும் வாகன ஓட்டிகளின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தில் மரணத்தை ஏற்படுத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகளாக தண்டனை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version