முன்னாள் காங். எம்.எல்.ஏ. ஊதியமாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்த உத்தரவு

தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ஊதியமாக பெற்ற 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை, நான்கு வாரங்களில் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேல்துரை. அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி, அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு ஒப்பந்ததாரராக இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டதால், வேல்துரையின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்த வேல்துரை பெற்ற ஊதியமான, 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயையும், 201 நாள் சட்டமன்ற பணியில் பங்கேற்றதற்கு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டது.

Exit mobile version