மாதவரத்தில் 2 அடுக்கு பேருந்து நிலையம் – முதலமைச்சர் திறந்து வைத்தார்

மாதவரத்தில் கட்டப்பட்டுள்ள மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் கோயம்பேடு, உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கு மற்றும் வணிக வளாகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

Exit mobile version