அணுசக்தி திட்டம் குறித்து ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஜரீஃப் உடன் பிரான்ஸ் உயர் ஆலோசகரான இம்மானுவேல் பொன்னி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் ஈரான் அணிசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில், ஈரான் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாகவும், இதற்காக வரையறைபட்ட அளவை விட அதிக அளவு யுரேனியத்தை ஈரான் பயன்படுத்தி வருவதாகவும் எனவே அணுசக்தி திட்டத்தை ஈரான் உடனே கைவிட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது.
இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமெரிக்கா அந்நாட்டிற்கு பொருளாதார தடை வித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதம் போக்கு அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவுறையின்படி அந்நாட்டு உயர் ஆலோசகர் இம்மானுவேல் பொன்னி ஈரான் வெளியுறவு துறை அமைச்சரை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சந்தித்தார். இதில், அணுசக்தி திட்டம் தொடர்பாகவும், இரு நாடுகளுடனான பொருளாதாரம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.