மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான மாரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதன் வெற்றியைத் தொடர்ந்து, மாரி இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் நவம்பர் 2-ம் தேதி மாரி இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.

தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்க ராஜா இசையமைத்து வருகிறார். விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Exit mobile version