பியானோவில் 'தி வேர்ல்டு பெர்ஸ்ட்': சென்னை சிறுவன் அசத்தல்

சர்வதே அளவில் உள்ள திறமைசாலிகளுக்கான ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ ரியாலிட்டி போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், பியானோவில் அசாத்தியமானவன் என்று நிரூபித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் லிடியன் நாதஸ்வரம். பெயரிலேயே நாதஸ்வரத்தை வைத்துள்ள இந்த சிறுவன், 2 வயது தொடங்கிய போதே தாளம் என்றால் அதற்கு என்ன பொருள் என்ற அறியாத வயதிலேயே தனது இசை பயணத்தை தொடங்கி விட்டார். அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற லிடியன், அதிவேகமாக பியானோ வாசித்து அனைவரையும் அசத்தினார்.

1900-ம் ஆண்டில் ரஷ்யன் இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட ‘பிளைட் ஆப் பம்பிள்பி’ என்ற இசையை வாசித்திருக்கிறார் லிடியன். விரல்களில் வேகம் இருந்தால் தான் இந்த இசையை வாசிக்க முடியும் என்ற நிலையில் இந்த இசையை சராசரியாக மனிதர்கள் வாசிப்பதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அசத்தி இருக்கிறார் லிடியன். முதலில் அந்த ஒரிஜினல் இசை போலவே உரிய வேகத்திலேயே வாசித்தார் லிடியன். பின்னர் ஓரிஜினல் இசையை விட வேகமாக நிமிடத்துக்கு 208 பீட்ஸில் அந்த இசையை வாசித்து அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தார்.

ஆனால் அடுத்தக்கட்டமாக 208 பீட்ஸ் வேகத்தை விட 325 பீட்ஸ் வேகத்தில் வாசித்ததில் அரங்கமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்ட, லிடியனின் தந்தை ஆனந்தத்தில் கண்கலங்கி நெகிழ்ந்துபோனார்.

லிடியன் நாதஸ்வரம், முதலில் தனது தந்தை வர்ஷன் அவர்களுடன் இசை நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். பின்னர், காலப்போக்கில் பியானோவில் அவரது கவனம் திரும்பியது. இதனாலேயே என்னவோ, அவர் யார்? என்று தெரிய இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

லிடியன் நாதஸ்வரம் இந்த அளவிற்கு சாதனை புரிவதற்கு அவரது தந்தை வர்ஷன் அவர்கள் பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. லிடியனின் தந்தை “புறம்போக்கு என்கிற பொதுவுடமை” படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க. தலைவியும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் மறைந்த போது, இளையராஜாவின் மென்மையான குரலில் “வானே இடிந்தது அம்மா” என்கிற பாடல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த பாடலை பாடியவர் தான் வர்ஷன் அவர்கள்.

தற்போது, லிடியன் நாதஸ்வரத்துக்கு, திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version