ஜெர்மனியின் லுஃப்தான்ஸா விமான நிறுவனத்தின் விமானிகள் உலகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், டெல்லி விமான நிலையத்தில் 700 பயணிகள் பல மணி நேரமாக காத்துக்கிடக்கின்றனர்.
5.5 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு லுஃப்தான்ஸா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிராங்ஃபர்ட் மற்றும் முனிக் நகரங்களுக்கு செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அதிகாலை முதல் 700 பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருக்கின்றனர்.