மக்களவை தேர்தல் தேதியை மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16-வது மக்களவையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜூன் 3-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் 17-வது மக்களவை தேர்தலுக்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் 7 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தலில் நாடு முழுவதும் 22 லட்சத்து 30 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனிடையே மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.