உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை மணலிக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி தேர்தல் பணிகளுக்காக கர்நாடகாவில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு சென்னை அடுத்த மணலியில் உள்ள 2 வது மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.அங்கு உதவி வருவாய் துறை அதிகாரி மகேஷ் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணியில் மாநாகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கர்நாடகாவில் இருந்து 13 ஆயிரத்து 535 கட்டுப்பாட்டு கருவி மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து 29 ஆயிரத்து 134 வாக்குப்பதிவு இயந்திர கருவி மற்றும் பேலட் இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படும் என்று உதவி வருவாய்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.