உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கான பயிற்சியை தேசிய தகவலியல் மையம் அளிக்க உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்கு தேசிய தகவலியல் மையம் அனைத்து தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு தேசிய தகவலியல் மையம் பயிற்சிகளை வழங்குகிறது. சென்னையை அடுத்த மறைமலைநகரில் நாளை நடைபெறும் பயிற்சி முகாமில், மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இணையதளம் மூலம் வார்டு வாரியாக வாக்காளர்களை பிரிப்பது தொடர்பாகவும், பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version