கடன்களை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் – மத்திய தகவல் ஆணையம் எச்சரிக்கை 

வங்கிகளில் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் மத்திய தகவல் ஆணையம் எச்சரித்துள்ளது.

வங்கிகளில் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை தருமாறு சந்தீப் சிங் என்பவர் ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். ஆனால் அந்த மனுவுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை.

இதனிடையே சந்தீப் சிங் கோரிய தகவல்களை கொடுக்குமாறு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. கடன்களை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை வெளியிடாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை மத்திய தகவல் ஆணையம் எச்சரித்துள்ளது. கடன்களை திருப்பி செலுத்தாத தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை 2016ஆம் ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்து குறிப்பிடத்தக்கது.

Exit mobile version