அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்தாண்டு முதல் அரசுப் பள்ளியில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம் பெரிய செங்கோடம்பாளையம், குருவரெட்டியூர் மற்றும் சென்னிமலை பகுதிகளில் 5 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக நவீன முறையில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இதனை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சிகள் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். ஜனவரி 21ஆம் தேதி முதல், எல்கேஜி, யூகேஜி வகுப்புக்கள் தொடங்கப்படும் என்றும் அரசுப் பள்ளிகள் மூடும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version