வசூல் ரீதியில் வெற்றி இல்லை… ஆனாலும் ரசிகர்களால் விரும்பட்ட படங்கள்…

ஒரு சில படங்கள் திரையில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெறாமல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வகையான படங்களை எப்போதும் டிவியில் போட்டாலும் ரசிகர்கள் சலிக்காமல் பார்க்கின்றனர். அப்படிப்பட்ட படங்களை தான் நாம் பார்க்க இருக்கிறோம்…

இருவர்

மணிரத்னம் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் இருவர், இரு துருவ அரசியலை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட படமாக இது அமைந்துள்ளது.

புதுப்பேட்டை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் புதுப்பேட்டை. Gangster படமான புதுப்பேட்டை வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை, ஆனால் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இந்த படம் மாறியுள்ளது. தற்போது எந்த Gangster படம் வந்தாலும், புதுப்பேட்டை படம் போல் வருமா என்ற அளவிற்கு ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்துள்ளது.

அன்பே சிவம்

கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியானது. படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாமல், திரையரங்கில் சில நாட்கள் மட்டுமே திரையிடப்பட்டது. ஆனால் படம் வெளியான ஓர் சில மாதங்களுக்கு பிறகே இந்த படம் ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது. தற்போது இந்த படம் மக்களால் அதிக கவரப்படும் படமாக அமைந்துள்ளது.

ஆயிரத்தில் ஒருவன்

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் “ஆயிரத்தில் ஒருவன்”. மிகுந்த பொருட் செலவில் எடுக்க பட்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களுக்கு முதலில் புரியாமல் போனது. படமும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலும் தரவில்லை. ஆனால், தற்போது இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவே மாறியுள்ளது.

மூடர் கூடம்

புது முக இயக்குனர் நவீன் இயக்கி வெளிவந்த படம் ‘மூடர் கூடம்’. இந்த படம் முழுவதும் புதுமுகம் நடித்திருந்ததால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பின் இந்த படத்தில் வரும் வசனங்கள் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

உறியடி

புது முக இயக்குனர் விஜயகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘உறியடி’. இந்த படமும் புதுமுகம் நடித்திருந்ததால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஜாதி வெறி கொண்ட ஆட்களை மாணவர்கள் ஓர் இரவில் எதிர்கொள்ளும் காட்சி திகிலூட்டும் வகையில் இருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர்.

அதே போல் விஜய் நடித்த புதியகீதை, அஜித்தின் முகவரி, சூர்யாவின் ஆயுத எழுத்து, விஜய்சேதுபதியின் இறைவி, என தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களும் முதலில் வசூலை தராமல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படங்களாகும்.

Exit mobile version