நவராத்திரியை முன்னிட்டு விளக்கு பூஜை

மாடக்குளம் கிராமத்தில் நவராத்திரி திருவிழாவை ஒட்டி முகநூல் நண்பர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது.

மேல மந்தை திடலில் நடைபெற்ற இந்தப் பூஜையில், கபாலீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது.

சிறு குழந்தை முதல் வயதான பெண்கள் என விளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version