12ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு, விவசாயம், சுற்றுலா கல்வி உள்ளிட்ட பாடங்கள் – அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் ஆடை வடிவமைப்பு, விவசாயம், சுற்றுலா கல்வி உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஏழூரில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும், 62 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில மொழி திறனை வளர்க்கவும் சரளமாக பேசவும் பயிற்சி அளிக்க, லண்டன் பேராசிரியர்கள் இம்மாத இறுதியில் தமிழகம் வரவிருப்பதாக கூறினார்.

Exit mobile version