பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்குக் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

வெங்கைய நாயுடு தனது வாழ்த்துச் செய்தியில், மோடியின் வழிகாட்டுதலில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களால் இந்தியாவுக்கு உலக அளவில் மதிப்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நல்ல உடல்நலமும் நீண்ட வாழ்நாளும் பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். மோடியின் தலைமையின்கீழ் நாடு நிலையான முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், மோடி சிறந்த ராஜதந்திரி எனவும், தீர்க்கமான முடிவெடுக்கும் தலைவர் எனவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் பிரதமர் மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மோடிக்கு டுவிட்டரில் லட்சக்கணக்கானோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளதால் அவர் பெயர் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது.

Exit mobile version