அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு இணையான தொழில் முறைப்படிப்பாக சட்டப்படிப்பு திகழ்கிறது. இந்தநிலையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. வரும் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வை தமிழக சட்டத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
சட்டப்படிப்பு கலந்தாய்வுக்காக மொத்தம் 3 ஆயிரத்து191 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 ஆயிரத்து 747 விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் B.Com. L.L.B, B.C.A. L.L.B, ஆகிய இரண்டு படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு துவங்குகிறது.
B.A. L.L.B, B.B.A L.L.B ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. வரும் 19 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.